விரைவில் புதிய ஆட்சியை அமைத்தே தீருவோம்! – சஜித் சபதம்

“மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துவிட்டோம் என்று மார்தட்டிய அரசு, இன்று துண்டு துண்டாக உடையும் நிலையில் உள்ளது. மக்களுக்குத் துரோகமிழைத்த இந்த அரசு, ஆட்சி கவிழும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றது. நாம் விரைவில் புதிய ஆட்சியை அமைத்தே தீருவோம்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவதுல்:-

“அரசு ஏற்கனவே மக்களின் ஆணையைக் காட்டிக்கொடுத்து விட்டது.

அரசு செல்லும் இந்த அழிவான பயணத்தை ஐக்கிய மக்கள் சக்தியால் மாத்திரமே பின்நோக்கித் திருப்ப முடியும்.

அரசால் அநீதி இழைக்கப்பட்ட விவசாயிகள், இன்று எம்மிடம் நீதி கேட்கின்றார். விரைவில் அமையவுள்ள எமது புதிய ஆட்சியில் விவசாயிகளுக்கு நீதியை வழங்கியே தீருவோம்.

சேர் ஜோன் கொத்தலாவல அன்று நாட்டின் விவசாயிகளின் முன்னேற்றத்துக்காகப் பெரும் பங்களிப்பைச் செய்தார். ஹரியால உள்ளிட்ட பிரதேசங்களில் விவசாயக் குடியேற்றங்களை ஏற்படுத்த அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.