சீன சேதன பசளைக் கப்பல் துறைமுகத்திற்குள் பிரவேசிக்கவில்லை.

அபாயகரமான பக்டீரியா அடங்கிய பசளையுடனான கப்பல் எந்த துறைமுகத்திற்குள்ளும் பிரவேசிக்கவில்லை எனக் கொழும்பு துறைமுகத்தின் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த கப்பலில் உள்ள பசளை இரண்டு முறை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த கப்பல் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் குறித்த பசளையை நிராகரித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அண்மையில் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், கடல் போக்குவரத்து தொடர்பான இணையத்தில் குறித்த கப்பல் நாட்டின் கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக கொழும்பு துறைமுகத்தின் கட்டுப்பாட்டாளர் குறித்த தகவலை மறுத்துள்ளார்.

இது தொடர்பில் கரத்து தெரிவித்த அவர் ஹிப்போ ஸ்ப்ரீட் என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்துக்குள் பிரவேசிக்கவில்லை என குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.