கொட்டும் மழையிலும் ரசிகர்கள் கொண்டாட்டம்.”அண்ணாத்த” வெளியானது.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்பட பலர் நடித்து உள்ளனர். டி.இமான் இசையமைத்து உள்ளார்.ரஜினிகாந்தின் 168வது படம் அண்ணாத்த.

இன்று ‘அண்ணாத்த’ படத்தின் முதல் காட்சி பல்வேறு திரையரங்கங்களில் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. ரஜினி ரசிகர்கள் பலரும் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சென்னையில் கொட்டும் மழைக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தை காண திரளான ரசிகர்கள் மேள தாளங்களுடன், பட்டாசுகளை வெடித்து திரையரங்குகள் முன் திரண்டனர்.

திரையரங்குகள் முன் நள்ளிரவு முதலே திரண்ட ரசிகர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர். அதிகாலை 4 மணிக்கு முதல்காட்சி திரையிரட்டப்பட்டதும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணாத்த திரைப்படத்தை நடிகர் தனுஷ் திரையரங்கில் கண்டுகளித்தார்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தை சேலத்தில் திருவிழா போல கொண்டாடிய ரசிகர்கள். திரையரங்கு முன்பு ரஜினிகாந்த் பேனருக்கு பாலபிஷேகம் செய்து ஆரவாரம் செய்தனர்.

அண்ணாத்த திரைப்படத்தை நடிகை குஷ்பு சென்னை காசி திரையரங்கில் கண்டு களித்தார்.

Leave A Reply

Your email address will not be published.