வெலிசர விபத்தில் படுகாயம் அடைந்த மற்றுமொரு நபர் பலி.

கடந்த 4ஆம் திகதி கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் வெலிசர மஹாபாகே மயானத்திற்கு அருகில் 16 வயது சிறுவன் ஓட்டிசென்ற சொகுசு கார் பல வாகனங்களில் மோதியதால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பேரில் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இரத்தினபுரியில் வசிக்கும் 17 வயதுடைய உயர்தர மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 52 வயதுடைய உறவினர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.

வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய சிறுவன் மற்றும் அவரது தந்தை வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மஹாபாகே பிரதேசத்தில் நகை வியாபாரி ஒருவருக்கு சொந்தமான சொகுசு காரை அவரது மகனே எடுத்துச் சென்றுள்ளதாகவும் விபத்து நடந்த இடத்திற்கு வந்த வர்த்தகர், அந்த வாகனம் தனது மகனால் கொண்டு வரப்பட்டது என்பது தமக்கு தெரியாது எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.