பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு இழப்புகளை மத்திய அரசே ஏற்கும் – நிர்மலா சீதாராமன்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பால் ஏற்படும் இழப்புகளை மத்திய அரசே ஏற்கும் என்றும், அனைத்து மாநிலங்களுக்கும் வருகின்ற 22ஆம் தேதி, 95 ஆயிரம் கோடி ரூபாய் வரித்தொகை பகிர்ந்தளிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, தனியார் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக மாநில முதலமைச்சர்கள் மற்றும் நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொண்டார். இந்தக்கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.

கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பால் ஏற்படும் இழப்புகளை மத்திய அரசே ஏற்கும் என்றும், இதனால் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதி குறைக்கப்படாது எனவும் உறுதியளித்தார்.

நவம்பர் மாதத்திற்கு மாநிலங்களுக்கு பரிந்தளிக்கப்பட வேண்டிய 47 ஆயிரத்து 541 கோடி ரூபாய் வரித்தொகையுடன் சேர்த்து மேலும் 47 ஆயிரத்து 541 கோடி ரூபாய் என மொத்தம் 95 ஆயிரத்து 82 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.