டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு; பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அறிவிப்பு.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் கான் ஷின்வாரி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் கான் ஷின்வாரி. கடந்த 2013ம் ஆண்டில் இருந்து அணியில் இடம்பெற்று விளையாட தொடங்கிய அவர், ஒரு நாள் போட்டியில் 4 ஆண்டுகளுக்கு பின்பு விளையாடினார்.

கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். அவர் இதுவரை மொத்தம் 17 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்டில் விளையாடி உள்ளார். சமீபத்தில் காயங்களுக்கு சிகிச்சை பெற்ற அவர் நலமுடன் திரும்பியுள்ளார். எனினும், மருத்துவர்கள் வழங்கிய அறிவுரையின்படி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை அவர் வெளியிட்டு உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.