ஆற்றில் கொண்டு செல்லப்பட்ட இறுதி ஊர்வலம் : தொடரும் அவலம்

புதுச்சேரி எல்லைப்பகுதியான சோரியாங்குப்பம் மற்றும் குருவிநத்தம் ஆகிய கிராமங்களுக்கு பொது மயானம் புதுச்சேரி கடலூர் மாவட்ட எல்லையில் தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆற்றின் கரையில் உள்ளது.

இந்த பகுதியில் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணமாக தென்பெண்ணை ஆற்றின் விவசாய நிலங்கள் வழியாக பிரிந்தோட துவங்கியது. அன்றிலிருந்து இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஊரில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு ஆற்றை கடந்து சென்று அடக்கம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பாக மயானத்திற்கு செல்ல கான்கிரீட் பாலம் 2016ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இருப்பினும் சரியான கட்டுமானம் இல்லாத காரணத்தினால் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே பாலம் இடிந்து சேதமானது. ஆகையால் இப்பகுதி மக்கள் மீண்டும் ஆற்றில் நீந்தி அக்கரை சென்று இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் குருவிநத்தம் பகுதியைச் சேர்ந்த 70 வயதை கடந்த அன்னதாட்சி என்கிற முதியவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு கொண்டு சென்றபோது தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஆர்ப்பரித்து வரும் வெள்ள நீரில் ஊர் மக்கள் உதவியுடன் சடலத்தை எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.

இதனால் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக மயானத்திற்கு செல்வதற்கான பாலத்திணை உடனடியாக கட்டித்தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பிறந்தது முதல் நிம்மதியின்றி வாழும் மனித வாழ்க்கை இறப்புக்கு பின் அமைதியை தழுவட்டும் என அனைத்து மதங்களும் சொல்கிறது.

ஆனால் இங்கே இறந்த பிறகும் அலைகழிக்கும் உறவுகளின் உடல்களின் எண்ணிக்கை கணக்கில் இல்லை. அரசின் கவனக்குறைவு, அதிகாரிகளின் அலட்சியம், ஏழை-எளிய மக்களின் கோரிக்கைகள் இன்னும் கோட்டையை எட்டுவதில்லை. ஊடகங்ளாவது அதை கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறுகின்றனர் கிராம மக்கள்.

Leave A Reply

Your email address will not be published.