புனரமைக்கப்பட்ட காந்தி பூங்கா மாநகர சபையிடம் கையளிப்பு!

மட்டக்களப்பு காந்தி பூங்கா புனரமைக்கப்பட்டு மாநகர சபையிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு விமானப்படையின் குறுப் கப்டன் நிலந்த பியசேன தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கலந்து சிறப்பித்திருந்தார்.

சேவா வனிதா நிதி உதவியால் இலங்கை விமானப் படையினரால் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட காந்தி பூங்காவானது மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மேலும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் மா.தயாபரன் உள்ளிட்ட விமானப்படையின் உயரதிகாரிகள், விமானப்படை வீரர்கள் என பலரும்
கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.