வெள்ளக்கொடி பறக்க விட்டு துக்கம் அனுஷ்டிப்பு.

வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதான வீதிகளில் வர்த்தக சங்கங்களின் ஏற்பாட்டில் கிண்ணியா-குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற சம்பவத்திற்கு துக்கதினம் அனுஸ்டிக்கும் வகையில் பிரதான வீதியில் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தினைத் தொடர்ந்து துக்கதினமாகப் பிரகடனப்படுத்தி வாழைச்சேனை, ஓட்டமாவடி வர்த்தக சங்கங்களினால் வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதான வீதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களில் வெள்ளைக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளன.

கிண்ணியா-குறிஞ்சாக்கேணி பகுதியில் நடைபெற்ற சோக சம்பவத்தினைய்ச்டுத்து வாழைச்சேனை, ஓட்டமாவடி வர்த்தக சங்கங்களினால் வர்த்தக நிலையங்களில் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடபட்டுள்ளதுடன், இச்சம்பவத்தில் மரணமடைந்தவர்களுக்காகவும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்காகவும் பிரார்த்தனைகளில் அனைவரையும் ஈடுபடுமாறும் வாழைச்சேனை, ஓட்டமாவடி வர்த்தக சங்கங்களின் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.