மாகாண சபை முறைமைக்கு உடனடியாகச் சமாதி கட்டவும் சபையில் வலியுறுத்து.

“மாகாண சபை முறைமை நாட்டுக்குப் பாரம். அதற்கு மக்கள் பணமே செலவிடப்படுகின்றது. எனவே, அந்த முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும்.”

– இவ்வாறு தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“ஒரே நாடு – ஒரே சட்டம் என்ற விடயம் சிறப்பு. ஆனால், 9 மாகாண சபைகளில் ஒன்பது சட்டங்கள் உள்ளன. மத்திய அரசிடம் ஒரு சட்டம் உள்ளது. இது பொருத்தமற்ற நடவடிக்கை. எனவே, புதிய அரசமைப்பின் ஊடாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்கள் இடம்பெற வேண்டும்.

மாகாண சபை முறைமை வேண்டாம். அது நாட்டுக்கு பாரம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.