பிரதேச செயலகத்தில் இஞ்சி விதைப்பொதிகளை வழங்கி வைப்பு!

நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கை திட்டமிடலுக்கு அமைய விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபோர் மண்டபத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் இன்று 2021.11.29 திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது.

பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் வழிகாட்டலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உழுந்து மற்றும் பயறு பயிர்ச் செய்கைத் திட்டத்தின் கீழ் குறித்த விதை பொதிகள் இன்று வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வின்போது மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 15 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த 57 பயனாளர்களுக்கு இஞ்சி பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கான பயறு மற்றும் உழுந்து விதை பொதிகள் ஏற்கனவே வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டதுடன் குறித்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சுதர்சன் உள்ளிட்ட அமைச்சரின் இணைப்பாளர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இன்றைய தினம் 798,000 ரூபாய் பெறுமதியான 1330 kg இஞ்சி விதைகள் இராஜாங்க அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.