வெலிங்டன் ராணுவ முகாமில் அதிகாரிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார் தமிழக முதல்வர்.

குன்னூர்: வெலிங்டன் ராணுவ முகாமில் அதிகாரிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்

நீலகிரி மாவட்டத்தில் காட்டேரி பகுதியில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின்ராவத் உள்ளிட்ட 13 பேர் பலியாயினர். நாடு முழுவதும் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மும்பையில் ராணுவ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அந் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அவசர அவசரமாக டில்லி திரும்பினார். பிரதமர் மோடிதலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிபின் ராவத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன் அமைச்சர்கள் உடன் ஆலோசனை நடத்தினார் தொடர்ந்து விமானம் மூலம் கோவை சென்றார். தொடர்ந்து சாலை வழியாக குன்னூர் வந்தடைந்தார். பின்னர் வெலிங்டனில் ராணுவ முகாமில் ராணுவ அதிகாரிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார்..

Leave A Reply

Your email address will not be published.