சகல பாடசாலைகளையும் மீள மூடிவைக்க நேரிடும்!

“பாடசாலைகளுக்குள்ளும் கொரோனா கொத்தணிகள் உருவாக ஆரம்பித்துள்ளன. இந்த நிலைமை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறில்லையெனில் மீண்டும் அனைத்துப் பாடசாலைகளையும் மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை சகலரும் நினைவில்கொள்ள வேண்டும்.”

– இவ்வாறு இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“பாடசாலை கட்டமைப்புக்குள் நிர்வாகப் பிரிவினர் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும்பாலானோர் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். இதனால் சில இடங்களில் கொரோனா கொத்தணிகளும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு அதிகரித்துவரும் கொரோனாத் தொற்றுப பவலைக் கட்டுப்படுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் பாடசாலை நிர்வாகப் பிரிவினருடையதாகும். அதேபோன்று மாணவர்களும் , பெற்றோருக்கும் இந்தப் பொறுப்பு காணப்படுகிறது.

சுகாதார விதிமுறைகள் அனைத்தையும் முறையாகப் பின்பற்றுமாறு பெற்றோர் தமது பிள்ளைகளை தொடர்ந்தும் அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக பாடசாலைகளுக்குள் சுகாதார விதிமுறைகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீற வேண்டாம் என்று அறிவுறுத்துவது அத்தியாவசியமானதாகும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.