முல்லை மாவட்ட கிராம சேவகர்களுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பிலான ஒருநாள் செயலமர்வு!

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் கிராம அலுவலர்களுக்கான சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான ஒருநாள் பயிற்சி இன்று(16) காலை 09.00மணிக்கு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த செயலமர்வினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன் அவர்கள் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

குறித்த செயலமர்வின் வளவாளராக மாங்குளம் பொலிஸ் நிலைய பிரதம ஆய்வாளர் எம்.வி.பி.சி ஹேரத் அவர்கள் கலந்துகொண்டார்.

குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் யோ.மதுசூதன், பயிற்சிப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவகர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மாவட்ட செயலக பயிற்சி பிரிவினரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெறும் இப் பயிற்சியினூடாக கிராம மட்டத்தில் பிரதான உத்தியோகத்தர்களான கிராம சேவகர்களின் அறிவு, திறன், நடத்தை ஆகியவற்றை வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டமாக இது அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.