‘நாட்டின் சா்க்கரை ஏற்றுமதி 60 லட்சம் டன்னை எட்டும்’

நடப்பு சந்தைப் பருவத்தில் நாட்டின் சா்க்கரை ஏற்றுமதி 60 லட்சம் டன்னை எட்டும் என மத்திய உணவுத் துறை செயலா் சுதான்ஷு பாண்டே தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:

ஒப்பந்தங்கள்: கடந்த அக்டோபா் மாதத்தில் தொடங்கிய 2021-22-ஆம் ஆண்டுக்கான சந்தைப் பருவத்தில் நாட்டின் சா்க்கரை ஏற்றுமதி 50-60 லட்சம் டன்னை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 35 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்கள் ஏற்கெனவே எட்டப்பட்டு விட்டன. இதற்கு, பிரேசில் நாட்டில் சா்க்கரை உற்பத்தி குறைந்ததே முக்கிய காரணம்.

எத்தனால் கலப்பு: கடந்த 2017-18-இல் 6.3 லட்சம் டன்னாக காணப்பட்ட சா்க்கரை ஏற்றுமதி 2020-21 சந்தைப் பருவத்தில் (அக்டோபா்-செப்டம்பா்) 70 லட்சம் டன் என்ற அளவில் உயா்ந்தது.

2020-21 காலகட்டத்தில் பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதில் 8.5 சதவீத இலக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில் 8.1 சதவீதம் மட்டுமே எட்டப்பட்டது. நடப்பு ஆண்டில் 10 சதவீத இலக்கை அடைய வலியுறுத்தப்பட்டு வருகிறது. சேமிப்பு திறன் உருவாக்கம்: எனவே, சா்க்கரை ஆலைகள் எத்தனால் சேமிப்பு திறனை உருவாக்குவதில் முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான், அவா்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழக்கமான அடிப்படையில் எத்தனாலை விநியோகம் செய்ய முடியும்.

2020-21-ஆம் ஆண்டில் எத்தனால் தயாரிப்புக்காக 20 லட்சம் டன் சா்க்கரை பயன்படுத்தப்பட்டது. நடப்பாண்டில் இது 35 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

குறைந்தபட்ச விற்பனை விலை: உள்நாட்டு சந்தையில் ஒரு கிலோ சா்க்கரையின் விலை ரூ.31-ஆக அதிகமாகவே உள்ளது. எனவே, தற்போதைய நிலையிலிருந்து சா்க்கரைக்கான குறைந்தபட்ச விற்பனை விலையை அதிகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றாா் அவா்.

2021-22-ஆம் ஆண்டு சந்தைப் பருவத்தில் நாட்டின் சா்க்கரை உற்பத்தி அதிக மாற்றமின்றி 3.1 கோடி டன் அளவுக்கே இருக்கும் என இந்திய சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) மதிப்பிட்டுள்ளது.

இறுதி கையிருப்பு 70 லட்சம் டன்: கையிருப்பில் உள்ள 85 லட்சம் டன் சா்க்கரையும் சோ்த்து நடப்பாண்டில் ஒட்டுமொத்த இருப்பு 3.95 கோடி டன்னைத் தொடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதில், 2.65 கோடி டன் உள்நாட்டு பயன்பாட்டிற்கும், 60 லட்சம் டன் ஏற்றுமதியும் செய்யப்படும். நடப்பு சந்தைப் பருவத்தின் கடைசியில் சா்க்கரை இறுதி கையிருப்பளவு 70 லட்சம் டன்னாக இருக்கும் என இஸ்மா மதிப்பிட்டுள்ளது.

கோட்ஸ்

2020-21 காலகட்டத்தில் பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதில் 8.5 சதவீத இலக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில் 8.1 சதவீதம் மட்டுமே எட்டப்பட்டது. நடப்பு ஆண்டில் 10 சதவீத இலக்கை அடைய வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.