கொழும்பு பல்கலை மருத்துவபீட பட்டமளிப்பு: 13 தங்கப் பதக்கங்களை வென்று தமிழ் மாணவி.

கொழும்புக் பல்கலைக்கழகத்தின் எம்.பி.பி.எஸ். இறுதிப் பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா என்ற மாணவி 13 தங்கப் பதக்கங்களைப் பெற்றுப் பெரும் சாதனை படைத்துள்ளாா்.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பட்டமளிப்பு விழாவின்போது வழங்கப்படும் 37 தங்கப் பதக்கங்களில் சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உட்பட 13 தங்கப்பதக்கங்களை இவர் தனதாக்கிக் கொண்டுள்ளாா்.

அத்தோடு குறித்த பட்டப்படிப்பு ஆண்டுக்குரிய முதல்நிலையாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று 7/3 ஜச் சேர்ந்த ஓய்வுநிலை அதிபர் தணிகாசலம் மற்றும் குமுதா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியான தர்ஷிகா இந்தப் பெரும் சாதனையைப் புரிந்து பெற்றோருக்கும் சொந்த மண்ணுக்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.