பாக்கிஸ்தான் பதில் உயர்ஸ்தானிகர் கட்டுகஸ்தோட்டை சாஹிராக் கல்லூரிக்கு விஜயம்.

இலங்கைக்கான பாக்கிஸ்தான் பதில் உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் அவரது பாரியார் சகிதம் கட்டுகஸ்தோட்டை சாஹிராக் கல்லூரிக்கு விஜயம் செய்தார்.
இப்பாடசாலையின் அதிபர் ஏ.எச்.கலிலுர்ரஹ்மான் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்து கட்டுகஸ்தோட்டை சஹிராப் பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர்.

பாடசாலை அதிபர் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க கனணி தொழில் நுட்ப ஆய்வு கூடம் அதற்கான கட்டிட வசதிகiயும் மற்றும் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கான உதவிகளை மேற்கொள்வதற்கு கவனம் செலுத்தப்படுமென இந்தக் கலந்துரையாடலின் போது மேலும் இலங்கைக்கான பாக்கிஸ்தான் பதில் உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் தெரிவித்தார்.

பாக்கிஸ்தான் பதில உயர்ஸ்தானிகர் கட்டுகஸ்தோட்டை சாஹிராக் கல்லூரிக்கு கனணி இயந்திரம், பாடசாலைக்கான கற்றல் உபகரணங்கள் கையளிப்பு விளையாட்டுப் பொருட்கள் பாக்கிஸ்தான் பதில் உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் அவர்களால் கையளிக்கப்பட்டன.

இந்த சந்திப்பில் பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் இலங்கைக்கான வவிதிவிடப்பிரதிநிதி அப்சல் மரைக்கார், அகில இலங்கை வை. எம்.எம். பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம். ரிஸ்மி, கண்டி மாவட்ட கொவிட் செயலணியின் தலைவர் கே. ஆர். ஏ. சித்தீக், கண்டி திடீர் மரண விசாரணை அதிகாரி ஹனிபா அஸ்ஹர், இளம் நட்புறவு ஒன்றியத்தின் தலைவர் ஸமீல், பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளர் ஏ. ஜி. பஸான் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.