ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படுமா? மத்திய அரசு புதிய தகவல்
ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் வேலை செய்யாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள் ஒமைக்ரானுக்கு எதிராக செயல்படுமா என மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இவ்வாறு பதிலளித்தார்.
முன்னதாக, நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்ததாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது. அதிகளவில் மகாராஷ்டிரம் மற்றும் தில்லியில் 54 பேர் பாதிக்கப்ப்டடுள்ளனர்.
தெலங்கானா 20, கர்நாடகம் 19, ராஜஸ்தான் 18, கேரளம் 15, குஜராத் 14, உத்தரப் பிரதேசம் 2, ஆந்திரப் பிரதேசம் 2, சண்டிகர், மேற்கு வங்கத்தில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருவர் மட்டுமே ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.