பம்பலப்பிட்டியில் , ரயிலில் மோதுண்டு இளம் யுவதி பரிதாப மரணம்!

கொழும்பில் ரயிலில் மோதுண்டு இளம் யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பலப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில், மருதானையிலிருந்து பெலிஅத்த நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த யுவதி மரணமடைந்துள்ளார்.

மாளிகாதென்ன, வெயாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 19 வயது யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் மாதம்பை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.