லூதியனாவில் உள்ள கீழமை நீதிமன்ற கழிவறையில் குண்டுவெடிப்பு.

அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் பஞ்சாப் மாநிலமும் ஒன்று. வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடியதில் பஞ்சாப் மாநில விவசாயிகளின் பங்கு பெரும் பங்கு. தேர்தல் நெருங்க மாநிலத்தில் பதட்டமும் அதிகரிக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அவர்களிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற பாஜக திவீரமாக பணி செய்கிறது. காங்கிரஸ் கட்சியை உடைக்கும் முயற்சிகள் முன்போல பலன் கொடுக்காத நிலையில் சீக்கியர்- இந்து மோதலை உருவாக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. கடந்த சில மாதங்களில் மட்டும் இருவர் சீக்கிய மத நூலை இழிவு செய்ததாக கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் லூதியனாவில் உள்ள கீழமை நீதிமன்ற கழிவறையில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் 20-வதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளார்கள். இதுவரை இரண்டு உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்தியாவில் பொதுத் தேர்தலாக இருந்தாலும் மாநில தேர்தலாக இருந்தாலும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தீவிரவாத தாக்குதல்களும் குண்டு வெடிப்புகளும் நடக்கின்றன. இதை உள்ளூர் தேர்தல் களத்தில் பாஜக அரசியலுக்காக பயன்படுத்துவதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்!

Leave A Reply

Your email address will not be published.