வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கிணங்க இரத்த தானம் வழங்கும் நிகழ்வு.

வெலிமடை தள வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க இரத்ததானம் வழங்குதல் வெலிமடை வை. எம். எம். ஏ. பேரவையின் கிளையினால் முதல் தடவையாக இரத்த தானம் வழங்கும் நிகழ்வு வெலிமடை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கேட்போர் கூடத்தில் வெலிமடைக் கிளையின் தலைவர் எஸ். எம். நஸீம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி மற்றும் வெலிமடை தள வைத்திசாலையின் வைத்திய அதிகாரி எல். பி ஆர். மனோகரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சர்வ சமயத் தலைவர்களின் ஆசீர் வாதங்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் லந்தகம விஹாராதிபதி சரனங்கர ஹிமி மௌலவி முப்தீ எம். இம்டியாஸ் உப தலைவர் அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் உப தலைவர் இஹ்சான் ஹமீட் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.