செலவுக் குறைப்பிலிருந்து திறைச்சேரிக்கு 53 பில்லியன் ரூபாய் வருவாய்….

கடந்த 6 மாதங்களில் அரச நிறுவனங்கள் செலவினங்களை குறைத்து 53 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு சேமித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கலந்துரையாடலின் பின்னர் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய நிதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“பலர் பலவிதமான விடயங்களைச் சொன்னாலும், இந்த காலப்பகுதியில் பல சிரமங்களுக்கு மத்தியிலும் நாங்கள் எங்கள் பொருளாதாரத்தை பலப்படுத்தியுள்ளோம். ஊழல், வீண், மோசடி போன்றவற்றையும் ஒழித்து சேமித்துள்ளோம். மேலும் அனைத்து அரச நிறுவனங்களையும் இயன்றவரை சேமிக்குமாறு கேட்டுக் கொண்டோம். கடந்த ஆறு மாதங்களில் இராஜாங்க அமைச்சுக்கள் சுமார் 53 பில்லியன் ரூபாவை சேமித்து எமது செலவினங்களை மிச்சப்படுத்தியுள்ளன. அதேபோல், இம்முறையும் செலவீனங்களை குறைத்துக்கொண்டு விரயத்தை குறைத்து, உற்பத்திகளை அதிகரித்து எமது பொருளாதாரத்தை பலப்படுத்துவார்கள் என எதிர்ப்பார்க்கிறேன்” எனத் தெரிவித்தார்.

மேலும் நேற்று நிதி அமைச்சரினால் அறறிவிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொதி 229 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.