ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நோவக் ஜோகோவிச் பங்கேற்க மருத்துவ விலக்கு.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பேன் என செர்பியாவை சேர்ந்த உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார். மெல்போர்ன் பார்க்கில் இம்மாதம் நடைபெற உள்ள டென்னிஸ் தொடரில் விளையாட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க மருத்துவக்குழுவிடம் அனுமதி பெற்ற பின் இதில் கலந்து கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக அவர், ஆஸ்திரேலியாவில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்துதல் விதிமுறைகள் காரணமாக அங்கு நடைபெற உள்ள கிராண்ட் ஸ்லாம் தொடரில் பங்கேற்பேனா என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்று தெரிவித்திருந்தார். இதன் காரணமாக, தான் தடுப்பூசி போட்டுக் கொண்டேனா இல்லையா என்ற விவரத்தை அவர் வெளியிடாமல் வைத்திருந்தார்.
இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட உள்ளதை தெரிவித்துள்ளார்.மெல்போர்ன் செல்வதற்கு மருத்துவ விதிவிலக்கும் பெற்றுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.