கடலரிப்பினால் அழிவடையும் சாய்ந்தமருது, மாளிகைக்காடு கடற்கரை பிரதேசங்கள்.

சாய்ந்தமருது, மாளிகைக்காடு கடற்கரையோரப் பிரதேசங்கள் கடலரிப்பினால் பாரிய சேதத்திற்குள்ளாகி வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் மற்றும் பாரிய அலையின் வேகத்தினால் கடலோரம் தினசரி பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருவதுடன் , கரைவலை மீனவர்களின் தோணிகளையும், வள்ளங்களையும் பாதுகாப்பாக பேணுவதற்கு வேறு இடமில்லாமல் மீனவர்கள் பெரும் கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது கூட பாதிக்கப்படாத சாய்ந்தமருது, மாளிகைக்காடு கடலோரப்பிரதேசங்கள் தற்போதுள்ள கடலரிப்பினால் பாதிக்கப்பட்டு வருவது பிரதேச மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

தொடர்ச்சியாக இவ்வாறு கடலரிப்பு தொடருமேயானால் சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேங்களில் கரைவலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு தொழிலில்லாமல் நிர்க்கதி நிலைக்கு உள்ளாக வேண்டிவரும் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாரத்தில் இருந்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகள் இது விடயத்தில் விரைந்து கவனம் செலுத்த வேண்டும் என இப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.