மகா நாயக்க தேரருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்த சர்வ மதத்தலைவர்கள்.

ஸ்ரீ லங்கா அமரபுர பிரதான சங்க சபையின் பிரதான செயளாலர் பேராசிரியர் பல்லேகந்த ரதனசார பதில் மகா நாயக்க தேரரின் (07/01/2022) பிறந்த தினத்தை முன்னிட்டு, சர்வ மதத் தலைவர்களான சாஸ்த்ரபதி கலாநிதி கலகம தம்மரங்சி நாயக்க தேரர், சிவ ஸ்ரீ கலாநிதி பாபு சர்மா குருக்கள், அல் – ஹாஜ் அஸ் – ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல் – காதிரி ஆகியோர் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வின் போது, இன மத ஒற்றுமைக்கான எதிர்கால வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் சர்வ மதத் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.