சீனாவிடமிருந்து மீளவும் கடன் பெறும் இலங்கை.

சீனாவிடமிருந்து புதிதாக மற்றுமொரு கடனைப் பெறுவதற்கான பேச்சுகளில் இலங்கை அரசு ஈடுபட்டு வரும் நிலையில், அவசியமான உதவிகளை வழங்க சீனா எப்போதும் தயார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகள் ஆரம்பமானதிலிருந்தே இரு நாடுகளும் பரஸ்பரம் புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தி வருகின்றன எனவும் சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவிடமிருந்து புதிதாகக் கடன்களைப் பெறுவதற்கான பேச்சுகள் ஓரளவுக்கு முன்னேற்றகரமான நிலையில் இருக்கின்றன எனவும், இறுதிக்கட்ட முடிவுகள் எடுக்கப்பட்டவுடன் அறிவிக்கப்படும் எனவும் சீன வெளிவிவகார அமைச்சு மேலும் கூறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.