தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று அதிகாலை தொடங்கி பல்வேறு இடங்களில் லேசான மழைபெய்து வருகிறது. வடபழனி, கிண்டி,அடையாறு மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அடுத்த ஓரிரு மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

திருவாரூர், நன்னிலம், சன்னாநல்லூர், பூந்தோட்டம், பேரளம், குடவாசல், முடிகொண்டான் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.