நடன கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் காலமானார்

புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை நள்ளிரவு காலமானார்.

சமீப காலமாக சீறுநீரகப் பிரச்னைக்கு சிகிச்சைப் பெற்று வந்த பிர்ஜு(வயது 83) நேற்று இரவு 12.30 மணியளவில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கதக் நடனக் கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்த பிர்ஜுவின் திறமையை அங்கீகரித்து இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் வழங்கி இந்திய அரசு கவுரவித்தது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மேலும், கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் வரும் ‘உன்னைக் காணாத’ என்ற கதக் நடனப் பாடலை பிர்ஜு தான் வடிவமைத்துள்ளார். மேலும், கமல்ஹாசனுக்கு கதக் கற்றுக் கொடுத்ததும் பிர்ஜு என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.