பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசுக்கு ரூ.6,600 கோடி ஈவுத்தொகை

கெயில், என்எம்டிசி உள்ளிட்ட 12 பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து ரூ.6,600 கோடி ஈவுத்தொகையாக கிடைத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து முதலீடு, பொதுச் சொத்துகள் மேலாண்மைத் துறை செயலாளா் துஹின்காந்த பாண்டே ட்விட்டரில் திங்கள்கிழமை தெரிவித்தது:

இந்திய அணுமின் சக்தி நிறுவனம் (என்பிசிஐஎல்), பவா் கிரிட் காா்பரேஷன் ஆகிய நிறுவனங்களிடமிருந்து முறையே ரூ.972 கோடி, ரூ.2,506 கோடியை ஈவுத்தொகையாக மத்திய அரசு பெற்றுள்ளது. இதுதவிர ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஹெச்எல்எல் லைஃப்கோ் லிமிடெட், எஃப்ஏஜிஎம்ஐஎல், என்எஸ்ஐசி போன்ற நிறுவனங்கள் முறையே ரூ.351 கோடி, ரூ.149 கோடி, ரூ.19 கோடி, ரூ.12 கோடி, ரூ.31 கோடியை ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு அளித்துள்ளன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதேபோல என்எம்டிசி, கெயில் ஆகிய நிறுவனங்களிடமிருந்து முறையே ரூ.1,605 கோடி, ரூ.913 கோடியை ஈவுத்தொகையாக மத்திய அரசு பெற்றுள்ளது. மத்திய சேமிப்புக் கழகம், தேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், வேப்கோஸ் ஆகிய நிறுவனங்கள் முறையே சுமாா் ரூ.42 கோடி, ரூ.26 கோடி, ரூ.25 கோடியை ஈவுத்தொகையாக மத்திய அரசிடம் அளித்துள்ளன என்று அவா் தெரிவித்துள்ளாா்.

மொத்தத்தில் இந்த 12 பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்தும் ரூ.6,651 கோடியை மத்திய அரசு ஈவுத்தொகையாகப் பெற்றுள்ளது. இதன்மூலம் 2022 நிதியாண்டில் இதுவரை பொதுத் துறை நிறுவனங்கள் வாயிலாக மத்திய அரசுக்கு ரூ.40,000 கோடி ஈவுத்தொகையாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.