டெலிபிராம்டர் கோளாறால் பேச முடியாமல் திணறிய மோடி.

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர மாநாடு நேற்று நடந்தது. பல நாட்டு உலகத் தலைவர்கள் அமர்ந்திருந்த இக்கூட்டம் இணைய வழியில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மோடி ஆங்கிலத்தில் உரையாற்றினார். வழக்கமாக இந்தியில் பேசும் மோடி சர்வதேசக் கூட்டம் என்பதால் ஆங்கிலத்தில் பேசினார்.

ஆனால் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது டெலி பிராம்டர் கோளாறு ஆனது. சில நிமிடங்கள் வரை கோளாறு நீடித்ததால் ஒரு வார்த்தைக் கூட அவரால் ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. உலகத் தலைவர்கள் மத்தியில் அவர் குஜராத்தி மொழியில் ஏதோ சொல்ல முயன்றால். பின்னர் அந்த கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் டெலிபிராம்டரைப் பார்த்து பேசினார்.

இது சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் கிண்டல் கேலிக்கு உள்ளாகியிருக்கிறது. இதை உறுதி செய்து கொண்ட ராகுல்காந்தி “‘டெலிப்ராம்ப்டரால் கூட மோடியின் பொய்களை ஏற்க முடியவில்லை’ என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஏற்கனவே ராகுல்காந்தி மோடியால் டெலிபிராம்டர் இல்லாமல் ஒரு வார்த்தை கூட பேச முடியாது என்று சொன்னதை மீண்டும் டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

பின்னர் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,

““இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம். இந்த உலகிற்கு இந்தியா ஜனநாயக நம்பிக்கை, தொழில்நுட்ப சக்தி மற்றும் இந்தியர்களின் திறமை, சுவாபம் கொண்ட ஒரு செண்டைக் கொடுத்து முதலீட்டாளர்களை வரவேற்றுள்ளது. இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்” என்று பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.