வீழ்ந்தவர்களை எழுப்புவதுதான் எமக்குத் தேவை! – ரணில் கூறுகின்றார்.

அரசைப் பாதுகாக்கவோ அல்லது கவிழ்க்கவோ அல்லது விரட்டியடிக்கவோ தாம் வரவில்லை எனவும், வீழ்ந்தவர்களை எழுப்புவதுதான் தமக்குத் தேவை எனவும் முன்னாள் பிரதமரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதியின் உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் மேலும் குறிப்பிட்டதாவது:-

“அண்மையில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை அந்நியச் செலாவணி நெருக்கடியை மட்டுமே சுட்டிக்காட்டியுள்ளது. வேறு எதுவும் பேசவில்லை. மற்றும் நீண்ட கால தீர்வுகள் தேவை. தான் பொறுப்பேற்ற போது ஏழரை பில்லியன் டொலர் கடனாக இருந்தது என ஜனாதிபதி கூறுகின்றார்.

நம் பிரச்சினைகளுக்குக் காரணம் கடன் அல்ல. கடந்த கால விடயங்களால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. நாங்கள் அரசைப் பாதுகாக்கவோ அல்லது கவிழ்க்கவோ இங்கு வரவில்லை. வீழ்ந்தவர்களை எழுப்புவதுதான் நமக்குத் தேவை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.