மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு!

மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் 7 தொடக்கம் 10 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கான ‘பைஸர்’ முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (21) காலை மன்-லூசியா மகா வித்தியலயம் உட்பட பல பாடசாலைகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில், மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில், தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம் பெற்றது.

தரம் 7 தொடக்கம் 10 வரை கல்வி கற்கும் 12 தொடக்கம் 16 வயதுடைய மாணவர்களுக்கு மேற்படி கொரோனா தடுப்பூசியான ‘பைஸர்’ தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தும் நிலையங்களான பாடசாலைகளில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோரின் ஒத்துழைப்புடன் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இது வரை மன்னார் மாவட்டத்தில் 8500 மேற்பட்ட மாணவர்கள் பைஸர் தடுப்பூசியை பெற்று கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.