வாய் துர்நாற்றத்தை தவிர்க்க செய்யவேண்டியவைகள் என்ன…?

ஒவ்வொரு முறை பல் துலக்கும்போதும் நன்றாக பற்களில் பிரஸ்கள் படும்படி தேய்க்க வேண்டும். பற்களோடு ஈறுகளையும் இலேசாக அழுத்தி துலக்குவதால் ஈறுகளிடையே ஒளிந்திருக்கும் கிருமிகள் வெளியேறும்.

பற்களோடு நாக்கையும் சுத்தப்படுத்தினால் வாயிலுள்ள பெரும்பாலான கிருமிகள் நீக்கப்படும். இவற்றையெல்லாம் தினம்தோறும் தவறாமல் செய்து வந்தால் வாய் துர்நாற்றத்தை விரட்டிவிடலாம்.

வாய் துர்நாற்றத்தைப் போக்க வாசனையான உணவு பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் கிராம்பை மென்று வாயில் அடக்கிக் கொள்ளலாம். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படாது.

அரை லிட்டர் நீரில் புதினா சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர்நாற்றம் நீங்கும். வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.

குடல்சார்ந்த பிரச்னைகளால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் சரிசெய்ய காலையில் எழுந்தவுடன் டீ, காப்பிக்கு பதில் 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் வயிறு சுத்தமாவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் நீங்கும்.

காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கலாம். அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை உண்பதை குறைத்தால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம். சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.

Leave A Reply

Your email address will not be published.