தங்கம் வென்று சாதனை படைத்த கணேஷ் இந்துகாதேவிக்கான கௌரவிப்பு நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய நகர் கிராமத்தை சேர்ந்த யுவதி கணேஷ் இந்துகாதேவி அவர்கள் கடந்த 18ம் திகதி பாகிஸ்தானின் லாகூர் நகரில் இடம்பெற்ற இரண்டாவது பாகிஸ்தான் சிறீலங்கா சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 25 வயதுக்குட்ப்பட்ட 50-55 கிலோகிராம் எடைப்பிரிவில் இலங்கை அணிசார்பில் பங்கேற்று தங்கப்பதக்கத்தை பெற்றிருந்தார்.

சாதனை படைத்த கணேஷ் இந்துகாதேவி அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் ஏற்பாடாடில் நேற்று (30) காலை 10.30 மணியளவில் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கரிப்பட்ட முறிப்பு புதிய நகர் புதிய சூரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் புதிய சூரியன் விளையாட்டு கழகம் என்பன இணைந்து நடாத்திய இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினராக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பரமோதயன் ஜெயராணி அவர்களும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் நா.குகேந்திரா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

இதன்போது தங்கம் வென்ற யுவதி வீட்டிலிருந்து குறித்த மைதானம் வரை யுவதி மற்றும் அவருடைய தாயார், அம்மம்மா, அம்மப்பா மற்றும் விருந்தினர்கள் கரிப்பட்ட முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்ளின் பாண்ட வாத்திய அணிவகுப்பு மரியாதையையுடன் அழைத்துவரப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.

மிகவும் பின்தங்கிய கிராமத்தில் இருந்து தனது திறமையினை வெளிக்காட்டிய மாணவிக்கு இவ் விழாவினூடாக பலர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளதுடன் விருதுகளையும் பணப்பரிசில்களையும் வழங்கி கௌரவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.