இந்த ஆண்டு பட்ஜெட்டில் அல்வா கிடையாது… மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவிப்புக்கு காரணம் என்ன?

2022 – 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்த விவரங்களை மொமைல் மூலம் பார்க்கும் விதமாக புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து முடித்ததும், ஆஃப் மூலமாக அனைத்து விவரங்களையும் மக்கள் அறிந்துகொள்ள முடியும்.

கொரோனவின் உருமாறிய வைரஸான ஒமைக்ரான் பரவலால் ஒட்டுமொத்த இந்தியாவும் பெருந்தோற்றின் 3வது அலையில் சிக்கித்தவித்து வருகிறது. 2022ம் ஆண்டின் தொடக்கம் முதலே லட்சக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படி கொரோனா 3வது அலையின் கோரதாண்டவத்திற்கு இடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022 – 23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், கொரோனா பரவலைக் கருத்திக் கொண்டு அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெறவில்லை என்றும் மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி, குடியரசுத் தின உரையுடன் தொடங்கியது . அதனைத் தொடர்ந்து 2022 -2023ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி காலை (இன்று காலை) 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதாக கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வரலாற்று நிகழ்வாக 2021 – 2022ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் முதன் முறையாக காகிதமில்லா முறையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு இரண்டாவது முறையாக தாக்கல் செய்யப்பட உள்ள காகிதமில்லா பட்ஜெட்டை நாடாளுமன்ற உறுப்பினர்கள், சாமானி பொதுமக்கள் என அனைவரும் எளிதில் அணுகும் வகையில் ‘யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப்’ என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2022-2023 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் 1 பிப்ரவரி 2022 அன்று தாக்கல் செய்யப்பட்ட பிறகு, டிந்த பிறகு செல்போன் செயலியில் அப்லோடு செய்யப்பட உள்ளது.

இந்த செயலியில் பட்ஜெட் உரை, நிதி நிலை அறிக்கை, நிதி மசோதா, மானிய கோரிக்கைகள் உட்பட 14 வகையான ஆவணங்களை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில், ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளத்தில் இயங்கும் விதமாக செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை ‘இந்திய பட்ஜெட்’ இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் இதே இணையதளத்தில் இருந்து பட்ஜெட் தொடர்பான ஆவணங்களையும் மக்கள் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

பட்ஜெட் ரகசியங்கள் வெளியாக கூடாது என்பதற்காக அதனை தயாரிக்கும் குழுவில் உள்ள அதிகாரிகள் அனைவரும் நார்த் பிளாக் கட்டிடத்தில் தங்கவைக்கப்படுவது வழக்கம். மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகே அவர்கள் வீடுகளுக்குச் செல்லவும், குடும்பத்தினரை சந்திக்கவும் அனுமதிக்கப்படுவர். எனவே பட்ஜெட் அறிக்கை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியது கொண்டாடும் விதமாக மத்திய நிதியமைச்ச ஊழியர்களுக்கு தங்களது கையாலேயே அல்வா தயாரித்து வழங்குவார். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முதன் முறையாக ‘அல்வா கிண்டும் நிகழ்ச்சி ரத்து’ செய்யப்பட்டுள்ளது.

சுகாதார காரணங்களுக்காகவும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படியும் இந்த ஆண்டு அல்வா கிண்டும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊழியர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த ஆண்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 90 நிமிடங்கள் முதல் 120 நிமிடங்கள் வரை பட்ஜெட்டை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.