வைத்தியர் பிரியந்தினியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு GMOA கோரிக்கை (Video)

கந்தாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரியந்தினி கமலசிங்கத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் , போலீஸ் மா அதிபரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

அக் கோரிக்கையில்,
இளம் பெண் சுகாதார வைத்திய அதிகாரியான பிரியந்தினி கமலசிங்கத்தின் பாதுகாப்பு விடயம் தொடர்பில் , கிளிநொச்சி GMOA கிளை ஒன்றியத்தின் DGH கிளிநொச்சியினால் எமக்கு பிரதிநிதித்துவம் செய்யப்பட்டுள்ளது எனவும் ,

எமது கிளை ஒன்றியத்தின் பிரகாரம், கந்தாவளை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரியான வைத்திய அதிகாரி பிரியந்தினி கமலாசிங்கம், உள்ளூர் அரசியல்வாதியினால் அச்சுறுத்தப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதி கிளிநொச்சி DGH , GMOA கிளை ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கிணங்க , பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஒருங்கிணைப்பின் ஊடாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பின்னணியில், கூடுதல் சுகாதார வைத்திய அதிகாரியான டாக்டர் பிரியந்தினி கமலாசிங்கம் , தனது வழக்கமான கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில், அவருக்கு திருப்திகரமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் வழங்கத் தவறியுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூறிய உண்மைகளை கவனமாக மதிப்பாய்வு செய்த GMOA நிர்வாகக் குழுவானது, கூடுதல் சுகாதார வைத்திய அதிகாரியான சுகாதார வைத்திய அதிகாரியான பிரியந்தினி கமலாசிங்கத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உடனடி நடவடிக்கையை வழங்குமாறு அலுவலகங்களைக் கோருவதற்கு முடிவு செய்துள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உடனடி நடவடிக்கைகளினூடாக கிளிநொச்சி மாவட்டத்திற்குள் சுமுகமான சுகாதார சேவையை உறுதி செய்ய முடியும் எனவும் போலீஸ் மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுளள்ளது.
ஒன்றின் பின்ஒன்றாக தொடர்ந்து பல வன்முறைகள் இடம் பெறுவதை அடுத்து ஆளுனரின் அறிவுறுத்தலின் பெயரில் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரிப்பணிமனைக்கும் சுகாதார வைத்திய அதிகாரி விடுதிக்கும் மேலதிக 24 மணித்தியால பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் , டாக்டர் ப்ரியாந்தினி கமலசிங்கம் (Priyaanthini Kamalasingam) விரும்பும் எந்தவொரு வைத்தியசாலைக்கும் தற்காலிக இடம்மாற்றம் செய்ய உத்தேசித்துள்ளதாகவும் கூறப்பட்ட போதும், தன்னால் ஒருபோதும் தற்காலிக அல்லது நிரந்தர இடம்மாற்றத்தை ஏற்றுக்கொள்ளமுடியாதென்றும் , தற்பொழுது வழங்கப்பட்டுள்ள மேலதிக பாதுகாப்பு தனக்கு திருப்தியளிப்பதாகவும் ,தொடர்ந்தும் கண்டாவளைப் பிரதேசத்திலேயே சேவையாற்ற விரும்புவதாகவும் டாக்டர் ப்ரியாந்தினி தெரிவித்துள்ளார்.

அத்துடன் மனஅழுத்தம் காரணமாக வைத்தியர் ப்ரியாந்தினி கமலசிங்கம் விடுப்பு எடுத்துள்ளதாகவும், அவர் நேற்று பணிக்கு சமூகமளிக்கவில்லை என்றும் தெரிய வருகின்றது.

மாணவர்களின் கண்ணாடி மாபியா போன்று இன்னும் பல ஊழல்களை , வைத்தியர் ப்ரியாந்தினி கமலசிங்கம் தடுத்து நிறுத்தி தன் மேலதிகாரிக்கு அறிவித்த போதும் , அவர் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் , டாக்டர் ப்ரியாந்தினியை அந்த விடயங்களில் இருந்து விலகிக் கொள்ள வற்புறுத்தியும் , டாக்டர் ப்ரியாந்தினி ஒத்துழைக்காத பட்சத்திலேயே அடியாட்களை அனுப்பி கொலை செய்ய முற்பட்டமை தெரிய வந்துள்ளது.

கிளிநொச்சியில் கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மருத்துவர்  71 மாணவர்களைக் காப்பாற்றினார்

கிளிநொச்சி – தர்மபுரம் இல.1 ஆரம்ப பாடசாலையில் 71 மாண வர்களுக்கு கண் பாதிப்பு என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்தமை தொடர்பில் கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கிளிநொச்சி மருத்துவர் பிரியந்தினி விவகாரம் தற்போது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு செயலாளர் சிங்கராஜாஜீவா நந்தம் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பில் அவர்மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மருத்துவர், கண்டாவளை வைத்தியசாலை மருத்துவ அதிகாரி மருத்துவர் பிரியந்தினிக்கு தொலைபேசியில் அச்சுறுத்தியவர் கைது செய்யப் பட்டுள்ளதுடன், சந்தேக நபரை 03.02.2022 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது.

கிளிநொச்சியில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் கடந்த மாதம் கண் பரிசோதனை மேற்கொண்ட   தனியார்கண் மருத் துவ நிறுவனம் ஒன்று  1% மாணவர்களுக்கு கண்பாதிப்பு உண்டு எனத் தெரிவித்து , அவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள  தங்களது மருத்துவ நிலையத்திற்கு மேலதிக பரிசோதனைக்காக வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

இது தொடர்பில் ஊடகங்களில் சந்தேகம் எழுப்பட்ட நிலையில் நடவடிக்கையில் இறங்கிய சுகா தார பிரிவினர் அம்மாணவர்களை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உள்ள கண் வைத்திய நிபுணரிடம் பரிசோதிக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கண்டாவளை மருத்துவ அதிகாரி பிரிவு இப்போதுதான் புத்துணர்வு பெற்று எழுந்துகொண்டிருக்கிறது.  அதற்கு காரணம் இப்போது அங்கு மருத்துவ அதிகாரியாக பணிக்கு வந்துள்ள மருத்துவர் பிரியந்தினி கமலசிங்கம். அவர் துணிச்சலாக மருத்துவத்துறைக்குள் நடக்கும் ஊழல்களை, ஒத்துழைப்பின்மையை பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார்.

ஒரே நாளில் ஒரு கிராமத்தை சேர்ந்த 300 க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கண்ணில் குறைபாடு உள்ளது. அவர்கள்கண் ணாடி பாவிக்க வேண்டும் என ,  ஒரு பாடசாலை அதிபர் ஊடாக மாபெரும் மருத்துவ கொள்ளைர்களாக  ஈடுபட இருந்தவர்களை  இனம்காட்டி அந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தியும் இருந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து மருத்துவர் பிரியந்தினி கமலசி ங்கத்துக்கு தொலைபேசியில் சிலர் மிரட்டல் விடுத்திருந்த நிலையில், தனக்கு கொலை மிரட் டல் விடுக்கப்பட்டதாக வைத்தியர் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த நிலையில் மருத்துவரை தொலைபேசியில் அச்சுறுத்தியவர்  கைதுசெய்யப்பட்டதுடன், சந்தேக நபரை 03.02.2022 வரை விளக் கமறியலில் வைக்க  உத்தரவு   பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அநாமதேய நபரின் மிரட்டல் தொலைபேசி உரையாடல்கள்:-
கோபால் என்பவரது மிரட்டல். இவர் தற்போது போலீசாரால் கைதாகியுள்ளார்.

இது இன்னொரு அநாமதேய தொலைபேசி அழைப்பு

டொக்டர்.பிரியந்தினி உடனான , பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் அவர்களது தொலைபேசி உரையாடல் :-

Leave A Reply

Your email address will not be published.