ஷாருக் கான், இஷான் கிஷான் அணியில் சேர்ப்பு.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் ஒருநாள் தொடருக்காக அகமதாபாத் வந்த இந்திய வீரர்களில் ஷிகர் தவன், ருதுராஜ் கெயிக்வாட், ஷ்ரேயஸ் ஐயர், சைனி ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் ஆமதாபாத்தில் மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். முதல் ஒருநாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மாவும் இஷான் கிஷனும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குகிறார்கள்.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கானும் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம் நாளைய முதல் ஒருநாள் போட்டியில் ஷாருக் கானும் இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், இஷான் கிஷன், ஷாருக் கான்.

Leave A Reply

Your email address will not be published.