பிரதமர் முன்னிலையில் உறுதிமொழியேற்ற தாதியர்கள் சேவையில் இணைவு.

கொழும்பு தாதியர் கல்லூரியின் 153 தாதியர்கள் நைட்டிங்கேல் உறுதிமொழி வழங்கி சேவையில் இணையும் நிகழ்வு நேற்று (25) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

புளோரன்ஸ் நைட்டிங்கேலுக்கான நினைவேந்தலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில், 2018ஆம் ஆண்டுக்கான தாதியர் குழுவின் முதலாம் ஆண்டு பரீட்சையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற எஸ்.ஏ.டி.எம்.சுபசிங்க, ஏ.எஸ்.வீரசிங்க, கே.டி.சி.பியூமிகா ஆகிய மூன்று மாணவிகளும் பிரதமரிடம் இருந்து சிறப்புப் பரிசுகளைப் பெற்றுக் கொண்டனர்.

இதன்போது சிறந்த திறமையை வெளிப்படுத்திய தாதியர் மாணவிகளுக்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பரிசில்களை வழங்கி வைத்தார்.

அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர், நாரஹேன்பிட்டி அபயராமதிபதி வண.முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர்.

தாதியர் சேவை பற்றி புதிதாகச் சொல்லத் தேவையில்லை. தாதியர் சேவை என்பது இந்த நாட்டிலும் இந்த சமுதாயத்திலும் விலைமதிப்பற்ற சேவையாகும். தாதியர் சேவை என்று வரும்போது இது வேலையல்ல, தொழில். சில சமயம் நீங்கள் செய்யும் சேவைக்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்கிறது என்பது வேறு விடயம். ஆனால் நாங்கள் ஒரு நல்ல சேவையை வழங்க உறுதி பூண்டுள்ளோம்.

இன்று தாதியர் சேவையைப் பார்க்கும்போது, 1966ல் இருந்து அதை பற்றி கூறுவதற்கு எனக்குத் தெரியும். அன்றிலிருந்து இவர்கள் எல்லோரும் அடிமைகளாகவே வாழ்ந்தார்கள் என்று நினைக்கிறேன். இல்லையென்று சொல்ல முடியாது. இன்று அந்த அடிமை யுகம் முற்றாக ஒழிக்கப்பட்டு சுதந்திர யுகமாக மாறியுள்ளோம். இன்று இந்த நாட்டில் பெருமையுடன் வாழ உங்களுக்கு பலம் கிடைத்துள்ளது.

நமது பிரதமர் தற்போதைய ஜனாதிபதியிடம் வந்து எதையாவது நினைவுபடுத்தினால் அவர் வேண்டாம் என்று சொல்லமாட்டார். எமது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் எமக்கு செவிசாய்க்கிறார். இவர் நன்கு தேடிப்பார்த்து பணியாற்றுகின்றார்.

கொவிட் காலத்தில், தொற்றுநோய்களின் போது, அதே போல் போரின் போது, அல்லது பேருந்து கவிழ்ந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு வரும் போது, உங்கள் கைகளின் விடாமுயற்சி மிகவும் தெளிவாகத் தெரிந்தது. தாதியர் சேவை என்பது புத்தர் எப்போதும் மதிக்கும் ஒரு சேவை.

எமது பிரதமர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இந்த டிப்ளோமாவை எமக்கு வழங்குமாறு நாம் கேட்டிருந்தோம். அவர் அதனை பெற்றுக் கொடுத்தார்.

அவரே சான்றிதழ்களை வழங்கினார். பட்டமும் பல்கலைக்கழகமும் வேண்டும் என்றோம். அவர் அலரிமாளிகையில் விவாதம் நடத்தி அதற்கு ஒப்புதல் அளித்தார்.

எனினும், நாட்டில் உள்ள சுகாதார நிபுணர்களின் சில குறைபாடுகள் காரணமாக அவற்றைச் சரியாகச் செய்ய முடியவில்லை. இப்போது நாம் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். மே 12ஆம் திகதி சர்வதேச தாதியர் தினத்தன்று பல்கலைக்கழகத்திற்கான உறுதிமொழி வழங்கும் பணியை நிறைவேற்ற எதிர்பார்க்கிறோம்.

நீங்கள் உங்கள் தொழிலில் பெருமை கொள்ளுங்கள். பெருமைமிக்க தாதியர்களை இலங்கை நாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதே எமது தேவை. அதன்போது கடமையைச் செய்வோம் உரிமைகளை வெல்வோம் என்ற எண்ணக்கருவை மறந்துவிடாதீர்கள்.

சுகாதார அமைச்சர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல இங்கு உரை நிகழ்த்துகையில்,

உங்கள் வாழ்வில் இது ஒரு பெருமையான தருணம். தாதியர் சேவை என்பது உயிருக்கு உயிர் கொடுப்பது. இது தொழிலுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானமாகவே பார்க்கப்படுகிறது. அந்த சேவை உலகையே குணப்படுத்துகிறது.

நாடு முழுவதும் உள்ள தாதியர் கல்லூரிகளின் பங்கு மிகவும் முக்கியமானது மற்றும் காலத்திற்கு உகந்தது என்பதை நாங்கள் அறிவோம். நாட்டிற்கு தேவையான சரியான தாதியர்களை உருவாக்குவதில் அரச தாதியர் கல்லூரிகளின் பணியை நாம் பாராட்ட வேண்டும்.

வாழ்க்கையின் கடினமான தருணங்களில் பலர் உங்களிடம் வருகிறார்கள். எனவே உங்களின் இந்த சேவையின் மீதான உங்கள் கருணை மிக்க நெருக்கம் மனித குலத்தை அவர்களின் வாழ்க்கையை குணப்படுத்தும்.
கொவிட் தொற்றின் ஆரம்ப காலக்கட்டத்தில், சுகாதார சேவையை சேர்ந்த அனைவரும் பல சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றியவர்கள். கொவிட் தொற்றுநோய் முதலில் வந்தபோது நான் சுகாதார அமைச்சராக இருக்கவில்லை. ஆனால் முக்கிய மருத்துவமனைகளில் முகக்கவசம் இல்லை. பாதுகாப்பு உடைகள் இல்லை.

அதெல்லாம் ஒருபுறம் இருக்க, 3 அல்லது 4 நாட்கள் அல்லது 72 மணிநேரம் தொடர்ச்சியாக பணியாற்றி, அந்த வருவிளைவினை எடுத்துக் கொண்ட இந்த நாட்டில் உள்ள தாதியர் குழு, விசேட வைத்திய நிபுணர்கள் முதல் அடிமட்டம் வரை செயற்பட்டவர்கள் பாராட்டப்பட்டது போதுமா என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

தங்கள் உயிரை மாத்திரமன்றி தங்கள் குடும்பத்தினரது உயிரையும் பணயம் வைத்து பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பணியாற்றிய சகோதர, சகோதரிகளின் குழுவில் இன்று நீங்கள் இணைகிறீர்கள். இது ஒரு வேலையைத் தாண்டி மனித குலத்திற்கான சேவையாகும்.

இங்குள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களே இந்த நாட்டு மக்களுக்கு வாழும் உரிமையை வழங்கிய தலைவர். சுதந்திரம் என்ற சொல்லை பரிச்சயப்படுத்திய, எல்லை கிராமங்கள் என்ற சொல்லை நமது அகராதியிலிருந்து நீக்கிய தலைவர். இப்படிப்பட்ட ஒரு தலைவருடன் பணியாற்றும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்துள்ளது.

கொவிட் தொற்றுநோய் இந்த நாட்டிற்கு வந்தபோது, மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் நமது ஜனாதிபதி செயற்பட்டார்.

அந்தக் கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றும் வகையில் உலக நாட்டுத் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசி எமது நாட்டு மக்களுக்கு தடுப்பூசியைக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். பல நாடுகளில் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் அரசாங்கத்தை நாடுகிறார்கள். ஆனால் தடுப்பூசி போடுவதற்கு அரசாங்கம் மக்களைப் பின்தொடர்ந்து செல்லும் உலகின் ஒரே நாடு நாங்கள் என்று நினைக்கிறேன்.

சுகாதார நிபுணர்கள் ஆற்றிவரும் சேவையின் மதிப்புக்கு எல்லையே இல்லை என்பது என் இதயத்தில் எழுதப்பட்டுள்ளது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave A Reply

Your email address will not be published.