ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் 3ம் உலகப் போருக்கு வழிவகுக்கும்…

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் மூன்றாம் உலகப் போருக்கு வழி வகுக்கும் என ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் எச்சரித்துள்ளது.

இதன்படி ,உக்ரைனை ஆக்கிரமித்ததைக் கண்டித்து ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன. மேலும் பல்வேறு நாடுகள் தங்கள் வான்பரப்பு மீது ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்துள்ளன.

மேலும் ,இந்நிலையில் ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக பெலாரஸ் அதிபர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அந்நாட்டின் அதிபர் லூகாஷென்கோ, ரஷ்யா மீதான தடைகள் போரை விட மோசமானது என்று குறிப்பிட்டார். இது தொடரும் பட்சத்தில் அணு ஆயுதப் போர்தான் அனைத்திற்கும் முடிவு என்றும் லூகாஷென்கோ தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.