எச்சரித்த சில நொடிகளுக்குள் ரஷ்யா பெரும் தாக்குதல் : தொலைக்காட்சி கோபுரம் தகர்ந்தது (Video)

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள தொலைக்காட்சி கோபுரம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் முக்கிய தொலைக்காட்சியான தொலைக்காட்சி ரெயின் மற்றும் வானொலி நிலையமான எக்கோ மாஸ்கோ ஆகியவை தாக்குதலில் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உக்ரைன் தலைநகரில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு ரஷ்யா எச்சரித்த சில நிமிடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட சேனல்கள் ரஷ்யா குறித்து தவறான தகவல்களை ஒளிபரப்புவதாக கிடைத்த தகவலின் பேரில் ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், சம்பந்தப்பட்ட சேனல்கள் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன. அந்த தொலைக்காட்சி சேனல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும், அந்த சேனல்கள் யூடியூப்பில் ஒளிபரப்பப்படுவதாக கூறப்படுகிறது.

இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான போரை சட்டரீதியாக தீர்த்து வைப்பதில் உக்ரைனுக்கு விருப்பம் இல்லை என ரஷ்ய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி கோபுரம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இரு நாடுகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்றதுடன் அது தொடர்பான பேச்சுவார்த்தை உடன்பாடு இன்றி நிறைவடைந்துள்ளது.

இதற்கிடையில், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் உக்ரைனுக்கு நிதி வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைனில் இடம்பெற்றுவரும் யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கவலையடைவதாக அவர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

உலக வங்கியின் கூற்றுப்படி, எதிர்வரும் வாரத்தில் 350 மில்லியன் டாலர்களும், எதிர்வரும் மாதங்களில் 3 பில்லியன் டாலர்களும் வழங்கப்படும்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) உக்ரைனுக்கு 2.2 பில்லியன் டாலர்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ரஷ்ய செய்தி சேனலான “ரஷ்யா டுடே” ஐ கூகுள் முடக்கியுள்ளது. ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியிடப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, ரஷ்யாவில் சில யூடியூப் சேனல்களுக்கு கூகுள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.