முன்னாள் கணித ஆசிரியர் யாழ் வாகன விபத்தில் பலி.

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி முன்னாள் கணித ஆசிரியர் யாழ் வாகன விபத்தில் பலி. இராச வீதியில் நேற்றிரவு சம்பவம்!

பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியின் முன்னாள் கணித ஆசிரியரும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மூத்த விரிவுரையாளருமான கனகசபை பாஸ்கரன் கோப்பாய் இராச வீதி கிருஷ்ணன் கோவில் சந்தியில் நேற்று 03.03.2022 இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்து காரணமாக உயிரிழந்தார்

கரவெட்டியில் உள்ள வீட்டிலிருந்து இரவு கல்வியியல் கல்லூரியில் நடைபெறவிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தபோது வீதியில் வெளிச்சம் இன்றி நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியுடன் மோதி விபத்து நேரிட்டதாகத் தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.