கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் 01.08.2020 முதல் வழமைக்கு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் மீண்டும் வழமைக்கு திரும்பவுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

சுகாதார நலனை கருத்திற்கொண்டு புதிய நடைமுறைகளின் கீழ் விமான நிலைய செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கைக்குள் பிரவேசிக்கும் அனைவருக்கும் P.C.R பரிசோதனைகளை மேற்கொண்டு அதன் அறிக்கைகளை குறிப்பிட்ட இடத்திலேயே வழங்கப்படவுள்ளன.

இதற்காக பரிசோதனை கூடம் ஒன்றினை நிர்மாணிக்கும் பணிகள் கூடிய விரைவில் நிறைவு செய்யப்படவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ஜீ.ஏ. சந்திரசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.