குளிக்கச்சென்ற மூவர் நீரில் மூழ்கி மரணம் – பதுளையில் சம்பவம்

பதுளை மடுல்சீமை கெரண்டியெல்ல நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற மூவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

38 வயதான தந்தை 12 வயதுடைய அவருடைய மகள் மற்றும் 13 வயதுடைய மற்றுமொரு உறவுக்கார சிறுமியுமே சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.

இவர்கள் மூவரும் கெரண்டிஎல்ல நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்றிருந்த போது, சிறுமி தவறி குழியொன்றினுள் வீழ்ந்துள்ளதனை அடுத்து அவரை மீட்க தந்தை மற்றும் மற்றைய சிறுமி நீரினுள் குதித்ததனை அடுத்து மூவரும் நீரிழ் மூழ்கி பலியாகியுள்ளனர்.

Comments are closed.