பஞ்சாப்பில் ஆட்சியைக் கைப்பற்றும் ஆம் ஆத்மி – கருத்துக் கணிப்பில் தகவல்

பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்பு இன்று வெளியாகி உள்ளது. 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தம் 1,304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ், சிரோன்மனி அகாலிதளம் – பகுஜன் சமாஜ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மேலும் ஆம் ஆத்மி, பாஜக – பிஎல்சி கூட்டணிகளும் களத்தில் உள்ளன.

இந்நிலையில் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் கருத்து கணிப்பின் படி அங்கு ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க வாய்புள்ளது. ஆம்ஆத்மி அதிக இடங்களை கைப்பற்றும் என்று பெரும்பான்மையான கருத்துகணிப்புகள் முடிவில் தெரியவந்துள்ளது.

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் ABP கருத்துகணிப்பு

காங்கிரஸ் – 28

ஆம் ஆத்மி – 61

சி.அகாலிதளம் – 25

மற்றவை – 5

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் இந்திய டூடே கருத்துகணிப்பு

காங்கிரஸ் – 31

ஆம் ஆத்மி – 90

சி.அகாலிதளம் – 11

பாஜக கூட்டணி – 4

மற்றவை – 2

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் AXIS MY INDIA கருத்துகணிப்பு

காங்கிரஸ் – 19 – 31

ஆம் ஆத்மி – 76 – 90

சி.அகாலிதளம் – 7 – 11

பாஜக கூட்டணி – 1 – 4

மற்றவை – 2

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் JAN KI BAAT கருத்துகணிப்பு

காங்கிரஸ் – 18 – 31

ஆம் ஆத்மி – 60 – 84

சி.அகாலிதளம் – 12 – 19

பாஜக கூட்டணி – 3 – 7

Leave A Reply

Your email address will not be published.