ஜனாதிபதி அவர்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள 15 விடயங்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள், அமைச்சர் பெசில் ராஜபக்க்ஷ அவர்கள், தினேஷ் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, லசந்த அழகியவண்ண, பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஜகத் புஷ்பகுமார, சாந்த பண்டார, சாரதீ துஷ்மந்த, ஷான் விஜயலால் டி சில்வா, சாமர சம்பத் மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.