திமுக எம்.பி என்ஆர். இளங்கோ மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு

திமுக பாராளுமன்ற மாநிலங்கவை உறுப்பினர் என்ஆர். இளங்கோ அவரின் மகன் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு மதுவிலக்கு சோதனைச்சாவடி அருகே, கிழக்கு கடற்கரை சாலையில் விபத்தில் உயிரிழந்தார். கார் சாலையின் செண்டர் மீடியன் தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.

சென்னையில் இருந்து தனது நண்பர் வேதவிகாஷீடன் காரில் புதுச்சேரி நோக்கி சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. எம்.பியின் மகன் ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. நண்பர் வேதவிகாஷ் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டகுப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். .

Leave A Reply

Your email address will not be published.