3 வெளிநாட்டு தூதரகங்களை மூட இலங்கை முடிவு செய்துள்ளது

டொலர் தட்டுப்பாடு காரணமாக வெளிநாடுகளில் உள்ள இரண்டு இலங்கை தூதரகங்கள் மற்றும் கொன்சல் ஜெனரல் அலுவலகம் ஆகியவற்றை மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஈராக், பாக்தாத் மற்றும் நோர்வேயின் ஒஸ்லோவில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள கொன்சல் ஜெனரல் அலுவலகம் ஆகியவற்றை மார்ச் 31ஆம் திகதி முதல் மூடுவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினைகளை கருத்திற்கொண்டே வெளிவிவகார அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இதன்மூலம், ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் உள்ள கொன்சல் ஜெனரல் அலுவலகம் ஊடாக ஈராக்குடனான இலங்கை விவகாரங்கள் மேற்கொள்ளப்படும். நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் உள்ள தூதரகம் வழியாக தனது விவகாரங்களை மேற்கொள்ளும். கான்பராவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் சிட்னி கொன்சல் ஜெனரல் அலுவலகத்தின் விவகாரங்களைக் கையாளும்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக வெளிநாட்டு இராஜதந்திர பணிகளைச் செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.