பட்டினிச் சாவு ஏற்படாது! – அமைச்சர் மஹிந்தானந்த உறுதி.

“நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது. பட்டினிச் சாவை மக்கள் எதிர்கொள்ளமாட்டார்கள்.”

இவ்வாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது, மக்களுக்கு பிரச்சினை உள்ளது என்பதை நாம் ஏற்கின்றோம். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆனால், உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற விடயத்தை ஏற்க முடியாது. உரிய விளைச்சல் கிடைக்கின்றது. எனவே, அரிசி மற்றும் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது.

எனினும், நாட்டில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட வேண்டும் என்பதையே எதிரணி விரும்புகின்றது. அதற்கு நாம் இடமளிக்க வேண்டும். இப்பிரச்சினைகள் விரைவில் தீரும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.