சு.கவினர் முதலில் அமைச்சுப் பதவியை துறந்தால் நானும் துறப்பதற்குத் தயார்! மைத்திரியின் கருத்துக்கு நாமல் பதிலடி.

“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகி முன்னுதாரணமாக செயற்பட்டால், நானும் அமைச்சுப் பதவியை துறந்து, மொட்டு கட்சி தரப்பில் இருந்து முன்மாதிரியாகச் செயற்படத் தயார்.”

இவ்வாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்குமாறு மைத்திரிபால சிறிசேன யோசனை முன்வைத்துள்ளார். முதலில் சுதந்திரக் கட்சியின் அமைச்சு பதவியில் இருந்து விலகி, முன்னுதாரணமாக செயற்படட்டும். அதன்பின்னர் நான் பதவி துறப்பேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.