இது முகக்கவசமா? தாடியா? – சுரேஷ் கோபியை பார்த்து கேள்வி எழுப்பிய வெங்கையா நாயுடு..

நாடாளுமன்றத்தில் சீரியஸாக பேசிக் கொண்டிருந்த நடிகரும் எம்பியுமான சுரேஷ் கோபியை பார்த்து, இது என்ன முக கவசமா? தாடியா? என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கிண்டலாக கேட்க அவையில் சிரிப்பலை எழுந்தது.

கேரளாவில் பிரபல நடிகராக திகழும் சுரேஷ் கோபி பாஜகவிலும் முக்கிய பொறுப்பு வகிக்கிறார். தமிழில் தீனா படத்தில் அஜித்துக்கு அண்ணனாக நடித்து, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் சுரேஷ் கோபி.

63 வயதாகும் அவருக்கு பாஜக, மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பை அளித்துள்ளது. அவையில் சுரேஷ் கோபி சீரியஸாக பேசிக் கொண்டிருந்தபோது அவரது கெட் அப்பை பார்த்த துணை குடியரசு தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு, இது என்ன முக கவசமா? தாடியா? என்று கேள்வி எழுப்பினார்.

வெங்கையா நாயுடுவின் இந்த கிண்டலான கேள்வி அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

துணை குடியரசு தலைவரின் கிண்டலுக்கு பதில் அளித்த சுரேஷ் கோபி, தனது அடுத்த படத்திற்காக இந்த கெட் அப்பில் இருப்பதாக விளக்கம் அளித்தார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெங்கையா நாயுடு, ‘பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில் இருந்த காலனிய மனநிலையில் இருந்து இந்தியர்கள் வெளி வர வேண்டும். இந்தியர்கள் தங்களது அடையாளம் குறித்து பெருமை கொள்ள வேண்டும். தாய்மொழியை பெருமைப் படுத்தும் வகையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படுகிறது. இதனால் எங்களை காவிக் கல்வியை புகுத்துகிறார்கள் என்று சிலர் விமர்சிக்கின்றனர். அதில் என்ன தவறு இருக்கிறது? என்று நான் கேட்கிறேன்.

ஆங்கிலேயர் மெக்காலே கொண்டுவந்த கல்வி கொள்கை நிராகரிக்கப்பட வேண்டும். அது இந்தியர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.’ என்று பேசினார். இதில் காவி கல்வியை மத்திய அரசு புகுத்துவதில் என்ன தவறு இருக்கிறது என்று வெங்கையா நாயுடு பேசியது சர்ச்சையை உருவாக்கியது.

Leave A Reply

Your email address will not be published.